புதுச்சேரியில் பூட்டப்பட்டிருந்த கடையை உடைத்து திருட முயன்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி ஒதியஞ்சாலை உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் மகாத்மா காந்தி வீதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு பூட்டப்பட்டிருந்த ஜூஸ் கடையின் பூட்டை கடப்பாரையால் இரண்டு வாலிபர்கள் உடைத்து கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த ராஜபாண்டியன் (19), மற்றும் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த சந்தோஷ் (20), என்பதும் இருவரும் ஒர் வழக்கிற்காக சிறையில் இருந்த போது நண்பர்களாகி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு, வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுவது உள்ளிட்ட திருட்டில் ஈடுபடுவதும், இவர்கள் மீது தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் விழுப்புரத்தில் ஒரு திருட்டில் ஈடுபட்டுவிட்டு புதுச்சேரிக்கு மது அருந்த வந்துள்ளனர். அப்போது தங்களது கைவரிசையை புதுச்சேரியிலும் காட்ட முடிவு செய்தனர். ஒரு வார காலம் புதுச்சேரியில் மது அருந்திவிட்டு நோட்டமிட்டுள்ளனர்.
இறுதியாக நகரின் மையத்தில் காந்தி வீதியில் ஜூஸ் கடையை உடைத்து திருட முயன்ற போது அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்து திருட்டுக்கு அவர்கள் பயன்படுத்திய கடப்பாரை, கோடாலி, திருப்புலி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டி சில இடங்களில் தப்பிய வாலிபர்கள் மது குடிக்க வந்த இடத்தில் குற்றம் செய்து கையும் களவுமாக சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.