திரையரங்குகளுக்கு வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த திரையரங்கு உரிமையாளருக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, திரையரங்குகள் அந்த உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து எனவும் அதில் அவர்கள் கருதும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க அவருக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்தது.
மேலும் அங்கு இருக்கும் உணவு பொருட்களை வாங்கி உண்பது முற்றிலும் திரைப்படம் பார்ப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. பார்வையாளர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே திரையரங்குக்கு வருகின்றனர். எனவே அங்கு விதிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். மேலும் இது திரையரங்கு உரிமையாளரின் வணிக ரீதியான முடிவு என்று தெளிவாகத் தெரிகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளில் வெளி உணவு மற்றும் பானங்களை கொண்டு செல்வதைத் தடுக்கக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது,
மேலும் “இத்தகைய உத்தரவை பிறப்பித்து உயர்நீதிமன்றம் தன் அதிகார வரம்பை மீறியுள்ளது. திரையரங்குகளில் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் எனவும் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி உண்டு.
வெளியில் இருந்து திரையரங்குகளுக்கு உணவு கொண்டு வருவதை அரசின் விதிகள், தடை செய்யவில்லை. இருப்பினும், ஒரு திரையரங்கு உரிமையாளருக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துக்கொண்டு தனது வர்த்தகம் மற்றும் தொழிலைத் தொடர உரிமை உண்டு” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baby food, Supreme court, Theatre