Home /News /national /

இந்தியாவில் தயாரான உலகின் விலை உயர்ந்த சாக்லெட்... கிலோ என்ன விலை தெரியுமா?

இந்தியாவில் தயாரான உலகின் விலை உயர்ந்த சாக்லெட்... கிலோ என்ன விலை தெரியுமா?

கின்னஸ் சாதனை சாக்லெட்

கின்னஸ் சாதனை சாக்லெட்

இந்த உயர்தர சாக்லெட் இந்தியாவில் பல மாத உழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
உலகின் விலை உயர்ந்த சாக்லெட் என்ற பெருமையை Trinity - Truffles Extraordinaire என்ற உயர்தர சாக்லெட் பெற்றுள்ளது.

ஃபெபெல் எக்ஸ்க்விசிட் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள Trinity - Truffles Extraordinaire சாக்லெட் உலகின் விலை உயர்ந்த சாக்லெட் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறைவான சாக்லெட்களே தயாரித்து வெளியாகி உள்ள நிலையில் இந்தச் சாக்லெட் ஒரு கிலோ 4.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்த விலை உயர்ந்த சாக்லெட்டை உயர்தர சாக்லெட் ப்ராண்ட் ஆன ITC, சமையல் கலைஞர் பிலிப் கோன்டிசினி இணைந்து உருவாக்கியுள்ளனர். ஒரிஜினல் கோகோ உடன் இன்னும் பல அரிய சில உணவுப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்தர சாக்லெட் இந்தியாவில் பல மாத உழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. ITC தலைமை அதிகாரி ரஸ்தகி கூறுகையில், “இந்திய சாக்லெட் சந்தையில் மட்டுமல்லாது உலக அரங்கிலேயே புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளோம். உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் அங்கீகாரம் மேலும் பெருமை சேர்த்துள்ளது” என்றார்.

மேலும் பார்க்க: மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்..! நகர முடியாமல் திணறும் வைரல் வீடியோ

எலுமிச்சை விலை மூன்று மடங்கு வீழ்ச்சி... விவசாயிகள் கவலை...
Published by:Rahini M
First published:

Tags: Homemade chocolates

அடுத்த செய்தி