இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்... எதற்கு தெரியுமா?

'உம்பன்' புயலின் போது துல்லியமாக தகவல்களை கணித்து வழங்கியதற்காக இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்... எதற்கு தெரியுமா?
இந்திய வானிலை ஆய்வு மையம்
  • Share this:
'உம்பன்' புயலின் போது துல்லியமாக தகவல்களை கணித்து வழங்கியதற்காக இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் சார்பில்  எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வங்கக்கடலில் உருவான உம்பன் புயலின் நகர்வு குறித்த தகவல்களை கடந்த மே 16ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளது,  இதற்காக தங்களுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து உம்பன் புயிலின் நகர்வு மற்றும் கரையை கடக்கும் நிகழ்வின் நேரம் மற்றும் மழை, காற்றின் வேகம் குறித்த துல்லியமான தகவல்களை  டெல்லி வானிலை ஆய்வு மையம் வழங்கி உள்ளது.


இது போன்ற வெப்பமண்டல சூறாவளியின் போது சிறப்பாக சேவையாற்றி  துல்லியமான கணிப்புகளை வழங்கியதன் மூலம் மிகப்பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு  இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள உலக வானிலை ஆய்வு மையம், இதுபோன்ற வெப்பமண்டல சூறாவளியின் போது ஏற்படும் சேதங்களை தவிர்க்க தங்களுக்கு  தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Also read... இந்தியாவில் ஒரேநாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று: 2.5 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கைAlso see...
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading