முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம்.. காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் வெடித்த சர்ச்சை

இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம்.. காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் வெடித்த சர்ச்சை

காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் வெடித்த சர்ச்சை...

காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் வெடித்த சர்ச்சை...

கனடாவில் நடைபெறும் சர்வதேச காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • internati, Indiacanadacanadacanadacanada

கனடா நாட்டில் ஹேலிஃபாக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.

மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேரணியில் இந்திய குழுவினர் கையில் ஏந்திச் சென்ற தேசியக் கொடிகள் அனைத்திலும் மேட் இன் சைனா என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்து சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர். மேக் இன் இந்தியா என முழங்கி வரும் வேளையில் நம் தேசியக் கொடியில் மேட் இன் சைனா என வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Also see... காமன்வெல்த் 2022: ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட மேலும் 3 பதக்கம் வென்ற இந்தியா

top videos

    சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடியில் 100% பாலிசிஸ்டர் எனும் வாசகத்தின் கீழ் ’மேட் இன் சைனா’ என அச்சிடப்பட்டிருந்தது.இந்தியப் பிரதிநிதிகள் இந்தியாவில் தயாரிக்கப்படாத, சைனாவில் தயாரிக்கப்பட்ட கொடிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என முன்னதாக சர்ச்சை வெடித்துள்ளது.

    First published:

    Tags: Canada, Commonwealth Games