Home /News /national /

இரண்டாவது திருமணம் செய்த கணவன் : மின் கம்பியில் கட்டிவைத்து செருப்பால் விளாசிய முதல் மனைவி!

இரண்டாவது திருமணம் செய்த கணவன் : மின் கம்பியில் கட்டிவைத்து செருப்பால் விளாசிய முதல் மனைவி!

இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின் கம்பியில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி

இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின் கம்பியில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி

TELANGANA : தனது முன்னாள் கணவர் இரண்டாவது திருமணம் செய்த ஆத்திரத்தில், அவரை மின்கம்பியில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India
    தெலுங்கானாவில் உள்ள ஸ்வர்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கு அகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஸ்ரீகாந்த் வரதட்சணையாக 20 லட்சம் பெற்று திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால், பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்ரீகாந்த்,  வாரங்கல் பகுதியில் ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த  அகிலா, ஸ்ரீகாந்தை இழுத்துச் சென்று அங்குள்ள மின் கம்பியில் கட்டி வைத்துள்ளார் . பின்பு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.  தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் செருப்பு மாலை அணிவித்துள்ளார்.

    Read More: புரட்டாசி முதல் நாள்.. திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

    இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் ஸ்ரீகாந்தை மீட்டு அழைத்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Cheating case, Marriage, Telangana

    அடுத்த செய்தி