மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு கிராமவாசி ஒருவர் ‘பிரதமர் நரேந்திர
மோடியையை கூப்பிடுங்கள், அவர் இங்கு வந்தால்தான் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று கூறி அடம்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. அதன்படி, கிராமம் கிராமமாக சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகின்றனர். மாநிலத்தில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான கிக்கார்வாசுக்கு, ஒரு தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர். அங்கே, கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்ட நிலையில், ஒரே ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் தடுப்பூசி போடுவதற்கு மறுத்துவிட்டார். அப்போது அவரிடம், ‘யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்கள்?’ என்று சுகாதார குழுவினர் கேட்டனர். அதற்கு அந்த நபர் ஆரம்பத்தில், ‘ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்றார்.
அப்போது, ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு வந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வீர்களா?’ என்று கேட்டபோது, ‘துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் சொல்லி பிரதமர் மோடியை வரச்சொல்லுங்கள். அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அவரிடம் எவ்வளவோ வற்புறுத்திப் பேசியும் அவர், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால், சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், அந்த கிராமவாசியை மீண்டும் அணுகி, அவரையும், அவரது மனைவியையும் தடுப்பூசி போடுக் கொள்ள சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Must Read : ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் : மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு, நேரடியாக செல்லாமல் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.