தண்ணீரை சேமிப்போம்: நகரமயமாக்கலால் டெல்லியில் வறண்டு போன 300 ஏரிகள்!

குளங்கள் வறண்டு போனதற்கு, நகரமயமாக்கலால் காலான்கள் போல முளைத்திருக்கும் கட்டடங்கள் தான் காரணம்.

News18 Tamil
Updated: August 24, 2019, 1:38 PM IST
தண்ணீரை சேமிப்போம்: நகரமயமாக்கலால் டெல்லியில் வறண்டு போன 300 ஏரிகள்!
டெல்லி குளம்
News18 Tamil
Updated: August 24, 2019, 1:38 PM IST
இந்திய நாட்டின் தலைநகரான டெல்லியில் சுமார் 300 ஏரிகள் வறண்டு போயுள்ளன.

தெற்கு டெல்லியில் உள்ள சிறு காட்டுப் பகுதிக்கு மத்தியில் இருக்கும் வறண்ட பகுதிகள் தற்போது சிறுவர்களின்
கிரிக்கெட் மைதானமாக மாறியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக அந்த வறண்ட பகுதி, தண்ணீர் நிறைந்த சாத்புலா


ஏரியாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக சாத்புலா ஏரி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, தற்போது அங்கு ஏரி
இருந்ததற்கான சுவடே இல்லாமல் போயுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு அங்கு ஒரு ஏரி இருந்தது என்பதே தெரியாது. ஏனென்றால்,

Loading...

சிறுவர்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதல், அப்பகுதி அவர்களுக்கு விளையாட்டு மைதானமாகத்தான் இருக்கிறது.

அந்தப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், ‘இங்கு ஒரு ஏரி இருந்தது. இப்போது தண்ணியே இல்லாமல் வறண்டு
போய்விட்டது. நாங்கள் எங்கள் சின்ன வயதில், ஏரியில் குளிப்பதும் விளையாடுவதுமாக, அங்கேயே தான்
இருப்போம்’ என்கிறார்கள்.

சாத்புலா ஏரி, கி.பி.13-ம் நூற்றாண்டில் மனிதர்களால் கட்டப்பட்டது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் நிறைந்த
அந்த ஏரி, இன்று இப்படி வறண்டு போனதற்கு, நகரமயமாக்கலால் காளான்கள் போல முளைத்திருக்கும்
கட்டடங்கள் தான் காரணம். அந்தப் பகுதியில் இருக்கும் கட்டடங்கள், மழை நீர் குளத்துக்கு வரவிடாமல்
தடுத்துவிட்டன.

30 ஆண்டுகளுக்கு முன்பாக, சுற்றுலாப் பயணிகள், அழகான சாத்புலா ஏரியைக் காணக் குவிந்தார்கள். ஆனால், தற்போது இந்த இடத்தைப் பார்த்தால், ஏரி இருந்ததற்கான சுவடே இல்லாமல் இருக்கிறது. டெல்லி மாநகரில் மட்டும் சுமார் 300 ஏரி மற்றும் குளங்கள் வறண்டு போய், சிறுவர்களுக்கு மைதானமாகியுள்ளன.

Read Also...


மறைநீர்: ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2,497 லிட்டர் தண்ணீர் செலவாகுமாம்!

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...