ஹோம் /நியூஸ் /இந்தியா /

எருமை மாடுகள் மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் அதிவிரைவு ரயில்!

எருமை மாடுகள் மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் அதிவிரைவு ரயில்!

சேதமடைந்த வந்தே பாரத் ரயில்

சேதமடைந்த வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில் செல்லும் வழியில் எருமைகள் மேல் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து காந்திநகருக்கு செல்லும் வழியில் எருமை கூட்டத்தில் மேல் மோதியதில் முன் பகுதி சேதமடைந்தது.

  அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் பட்வா மற்றும் மணிநகர் இடையே காலை 11 மணி அளவில்  தண்டவாளத்தை கடந்துகொண்டிருந்த எருமை கூட்டத்தில் மேல் மோதியுள்ளது.

  அதில் ரயிலின் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ரயிலின் உட்பகுதியில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சேதமடைந்த காரணத்தினால் வந்தே பாரத் ரயில் 8 நிமிடம் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காந்திநகரை வந்தடைந்ததுள்ளது.

  Also Read : மனைவியை காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை.. தட்டி கழிக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அரை அதிவேக ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத்தில் உள்ள கலுபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

  அரை அதிவேக வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. இது 160 kmph வேகம் வரை 140 வினாடிகளில் செல்லக்கூடிய திறன் உடையது. மேலும் இதில் கவாச் என்ற பாதுகாப்பு அமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: Accident, Gujarat, Vande Bharat