விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு இனி கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மின் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள கட்டணங்களை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
மின்துறை சேவையில் பிரச்சனையோ, குறைபாடோ ஏற்பட்டால் இனி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முன் அறிவிப்பின்றி செய்யப்படும் மின்வெட்டின் போது, மீண்டும் எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பதை, குறுஞ்செய்தி மூலமாகவோ, ஊடகங்கள் மூலமாகவோ மின் வாரியம் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.