• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்வி... ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது - மத்திய அமைச்சர் விளக்கம்

டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்வி... ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது - மத்திய அமைச்சர் விளக்கம்

நித்யானந்த் ராய்

நித்யானந்த் ராய்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரா என்ற விபரம் மட்டும் சேகரிக்கப்படும்.

 • Share this:
  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எஸ்.சி., எஸ்.டி., எனப்படும் பட்டியலினப் பிரிவினர் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது என, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி, மத வேறுபாடுகளால் உயர் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று மத்தியக் கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதானிடம் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது குறித்து டி.ஆர்.பாலு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) சென்னை விடுதியில் 2019ஆம் ஆண்டில் பாத்திமாவின் தற்கொலையைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி, மத வேறுபாடுகளால் உயர் கல்வியின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

  டி.ஆர்.பாலு


  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பதவி விலகி வருவதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்று விரிவான கேள்வியை டி.ஆர்.பாலு எழுப்பினார்.

  இதற்கு மத்தியக் கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் சாதி, மத வேறுபாடுகளைக் களைய அதுசார்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மனநிலையைச் சீர்செய்யத் தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம், 1961-ன்படி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எந்த சாதி, மத வேறுபாடுகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது

  இந்நிலையில், டி.ஆர். பாலு, பாஜகவை சேர்ந்த ரக் ஷா நிகில் காட்சே ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பதிலளித்துப் பேசுகையில், அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டசபைகளில் எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்குவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரா என்ற விபரம் மட்டும் சேகரிக்கப்படும். ‘ஜாதிவாரி விபரங்களை சேகரிக்க வேண்டும்’ என, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள் கேட்டுள்ளன. ஆனால் மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடத்தப்படாது என்று பதிலளித்தார்.

  பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில் மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது 2011ல் சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 2015ல் இந்தக் கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் சமூக, பொருளாதார ரீதியிலான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஜாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் வெளியிடப்படவில்லை.

  Must Read : ‘இதுவரை இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட்?’ - நிதித்துறை இணையமைச்சர் விளக்கம்

  இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்த 2019 மார்ச்சில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தக் கணக்கெடுப்பு பணி இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: