கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் - யுஜிசி உத்தரவு

நவம்பர் 26ஆம் தேதியன்று பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட தினத்தில் பங்கேற்று அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசிக்க உள்ளார். இதனை பின்பற்றி பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் இந்த நிகழ்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் - யுஜிசி உத்தரவு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 20, 2020, 5:37 PM IST
  • Share this:
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் வருகின்ற 26 ஆம் தேதி அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதில் 1949ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தை நம் நாடு செயல்படுத்திய நவம்பர் 26ந் தேதியை நினைவுக்கூறும் வகையில் "samvidhan divas" என்கிற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த தினத்தை கடைபிடிக்கும் வகையில் நாட்டில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பங்கெடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மாணவர்கள் காலை 11 மணி அளவில் வாசிக்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also read... பாஸ் போடுவாங்களா.. இல்லையா.. விசாரணையை பார்க்க நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்த அரியர் மாணவர்கள்... ஸ்தம்பித்தது வழக்குகள்!கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26ஆம் தேதியன்று பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட தினத்தில் பங்கேற்று அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசிக்க உள்ளார். இதனை பின்பற்றி பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் இந்த நிகழ்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது அரசின் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த நிகழ்வை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading