தமிழகத்தில் திமுக கூட்டணி 33 இடங்களில் வெற்றிபெறும்: TIMES NOW கருத்துக்கணிப்பு!

மாதிரிப்படம்

தமிழகத்தை பொறுத்தமட்டில், திமுக கூட்டணி 33 இடங்களையும், அதிமுக கூட்டணி 6 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக TIMES NOW கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்தியில் பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று TIMES NOW கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் தொடங்கும் நிலையில், TIMES NOW மற்றும் VMR இணைந்து, புதிய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

மார்ச் 22 முதல் கடந்த 4-ம் தேதி வரையில், நாடு முழுவதும் 14,300 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இதன் முடிவில், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 279 இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 149 இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், திரிணாமுல் காங்கிரஸ், பாகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போன்ற இதர கட்சிகள் 115 இடங்களில் வெற்றிபெறும் எனவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில், திமுக கூட்டணி 33 இடங்களையும், அதிமுக கூட்டணி 6 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை தவிர்த்து தென்மாநிலங்களில், கர்நாடகாவில் 16 இடங்களையும், கேரளாவில் ஒரு இடத்தையும் பாஜக கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Also see


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
Published by:Vinothini Aandisamy
First published: