ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடியில் கோவில் கட்டிய எம்.எல்.ஏ.

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில வரலாற்றில், முதலமைச்சர் ஒருவருக்கு முதன் முறையாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

 • Share this:
  ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சித்தூா் மாவட்டத்திற்கு உட்பட்ட காளஹஸ்தியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

  ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு காளஹஸ்தியில் உள்ள ஜெகண்ணா காலனி அருகே ரூ.2 கோடியில் கோவில், நவரத்னா திட்ட அலுவலகம் ஆகியவற்றை காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி கட்டியுள்ளார்.

  ஆந்திர மாநில வரலாற்றில், முதலமைச்சர் ஒருவருக்கு முதல் முறையாக கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கே, தொகுதி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை அளிக்க ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி கோவிலில் இருக்கும் பணியாளா்கள் மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்க வழிவகை செய்ய இருக்கின்றனர்.

  இந்த கோவிலில் தங்கம், வெள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டி, நவரத்னா திட்டம் குறித்த படங்கள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், ஆந்திர முதலமைச்சரின் குடும்ப உறுப்பினா்களின் புகைப்படங்களும் செப்பு இலைகளின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

  ஜெகன் மோகன் ரெட்டி கோயில்


  Must Read : காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் ஊழல் - RTI மூலம் தெரியவருவதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

  இந்நிலையில், அந்த ‘ஜெகண்ணா நவரத்னா கோவில்’ நேற்று திறக்கப்பட்டது. இங்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள் வழங்கப்படுகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: