வரும் 16-ம் தேதி முதல் திருப்பதி மலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்

கோப்புப் படம்

திருப்பதியில் வரும் 16-ஆம் தேதி முதல் ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை மாட வீதிகளில் நடத்தவும், 300 ரூபாய் முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருப்பதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது.

    இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மாட வீதிகளில் உள்ள பார்வையாளர்கள் பகுதியில், குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    Also read... மத்திய அரசுக்கு ₹ 2,400 கோடியை செலுத்தாமல் உள்ள விமான சேவை நிறுவனங்கள்



    அதன்படி, ஆன்லைன் வாயிலாக 300 ரூபாய் டிக்கெட் எடுத்து வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 15-ஆம் தேதி பிரமோற்சவத்தின் அங்குரார்ப்பணம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 16-ஆம் தேதி இரவில், முதலாவது வாகன சேவையான பெரிய சேஷ வாகன சேவையும், 17-ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவையும் நடைபெறவுள்ளது.

    24-ஆம் தேதி காலை கோவில் திருக்குளத்தில் நடைபெறும் சக்கர ஸ்நானத்துடன் பிரமோற்சவம் நிறைவடையும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published: