தேநீர் கடை வருமானத்தில் உலகம் சுற்றும் கேரள தம்பதி!
தேநீர் கடை வருமானத்தில் உலகம் சுற்றும் கேரள தம்பதி!
விஜயன்- மோகனா தம்பதி
தேடல் மட்டுமே வாழ்க்கையை முழுமையடைய செய்யும் என்பதற்கேற்ப அடுத்து ஸ்வீடன், டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல மீண்டும் உழைக்க ஆரம்பித்து விட்டனர் இந்த உலகம் சுற்றும் தம்பதி.
தேநீர் கடை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி உலகைச் சுற்றிவருகின்றனர் கேரள தம்பதியர்.
வாழ்க்கை அழகானது. அதனை வாழ்ந்து பார்த்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உணர்ச்சி ததும்ப சொல்கிறார்கள், கேரளாவைச் சேர்ந்த விஜயன்-மோகனா தம்பதி. இவர்கள் இருவரும், கடந்த 12 ஆண்டுகளில் 23 நாடுகளைச் சுற்றி வந்துள்ளனர்.
கொச்சியில் தேநீர் கடை நடத்தி வரும் 69 வயது விஜயனுக்கு சிறு வயதில் இருந்தே உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசை.
தந்தையுடன் இந்தியாவில் உள்ள கோயில்களை சுற்றிப் பார்த்த விஜயனுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. தந்தையின் மறைவுக்குப் பிறகு பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் காரணமாக, உலகை சுற்றும் கனவை ஒத்திவைத்தார் விஜயன்.
பொருளாதாரம் தடையாக இருந்ததால், 1963-ம் ஆண்டு முதல் தேநீர் கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஊர் சுற்றுவதற்காக சேமித்து வந்தார். 1974-ம் ஆண்டில் மோகனாவை கரம்பிடித்தார் விஜயன், கணவனின் எண்ண ஓட்டங்களுக்கு உறுதுணையாக மனைவி மோகனாவும் கைகொடுக்க, கடின உழைப்பின் பலனாக 2 பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
தேநீர் கடை வருமானத்தில் அமெரிக்கா, அர்ஜெண்டினா, பெரு, பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளை இந்த தம்பதி வலம் வந்துள்ளனர்.
இவர்களது தேநீர் கடையில் வேறு யாரையும் பணியமர்த்தவில்லை. கடைக்கு வேலையாட்களும், முதலாளிகளும் நாங்களே என பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
பயணம் மேற்கொள்ள பணம் இல்லை என்றால் வங்கியில் கடன் வாங்கி பயணம் சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊர் திரும்பியவுடன் கடனை அடைத்துவிட்டு, அடுத்த பயணத்திற்கு திட்டமிடுகின்றனர்,
விஜயன்- மோகனா தம்பதி நடத்தும் தேநீர் கடை முழுவதையும் வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் ஆக்கிரமித்துள்ளன. தேடல் மட்டுமே வாழ்க்கையை முழுமையடைய செய்யும் என்பதற்கேற்ப அடுத்து ஸ்வீடன், டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல மீண்டும் உழைக்க ஆரம்பித்து விட்டனர், இந்த உலகம் சுற்றும் தம்பதி.
சமூக வலைதளங்களில், பிரதமர் மோடிக்கு அடுத்து உலக நாடுகளை அதிக அளவில் சுற்றி வந்த தம்பதி என பேசப்படுகிறார்கள் இவர்கள்.
இந்த உலகத்தை சுற்ற பணம், மொழி, தொழில்நுட்பம் என எதுவும் தேவையில்லை.. வாழ்க்கை அழகானது என தெரிந்தால் போதும் என்பதற்கு விஜயன் - மோகனா தம்பதியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.