ஹோம் /நியூஸ் /இந்தியா /

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா..? வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா..? வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா என உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா என உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

இந்தியாவில் 18 வயது நிரம்பிய பெண்களும், 21 வயது நிரம்பிய ஆண்களும் திருமணம் செய்து கொள்வதற்குச் சட்டம் அனுமதி அளிக்கிறது. அதேநேரத்தில் இஸ்லாமியத் தனிநபர் சட்டம், வயதுக்கு வந்த 15 வயது சிறுமி திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கிறது. இந்த நிலையில் 15 வயதுக்கு மேற்பட்ட மைனர் இஸ்லாமிய பெண்கள், விருப்பமான நபரைத் திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் திருமணச் சட்டத்தின் கீழ் வராது எனப் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

இதை எதிர்த்து தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இஸ்லாமிய மைனர் பெண்களின் திருமணம் செல்லுமா என விசாரணை நடத்தப்படும் என்றது. மேலும் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா என உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

First published:

Tags: Marriage, Supreme court