தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு, “ஸ்டெர்லைல் ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை எங்களுக்குத்தான் தர வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள் பிரித்து வழங்குவோம்” என வாதிட்டது.
அப்போது, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், “உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், “ ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்குவதே முறை என ஏற்கெனவே ஒரு உத்தரவு இருக்கிறது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படலாம். அப்போது ஆலை நிர்வாகமும் இருக்கலாம்” என்று கூறினார். அப்போது“ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று தமிழக அரசு வாதிட்டது.
மத்திய அரசு, சட்டம் ஒழுங்கு சிக்கலை காரணம் காட்டி உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தது. இத்துடன், “ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது” என்றும் கூறியது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவை, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் முடிவு செய்யும். இது தவிர்த்து உள்ளூர் மக்கள் கொண்ட மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்கலாம். அதனை நிபுணர்கள் குழு தேர்வு செய்யும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முழுக்க முழுக்க ஆக்சிஜன் தயாரிப்புக்கான அனுமதி மட்டுமே.வேறு எந்த பணிக்கும் அங்கே அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தது.
Must Read : மே 2-ம் தேதி தேர்தல் வெற்றி கொண்ட்டாட்டங்களுக்கு தடை - தேர்தல் ஆணையம்
நேற்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க அனைத்து கட்சிகளும் ஒப்புதல் வழங்கினர். அப்போது, தமிழக அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த பிரிவையும் இயக்கக் கூடாது கூறியிருந்தது குற்றிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oxygen, Sterlite plant, Supreme court, Thoothukudi Sterlite