• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • பாஜகவின் வெற்றி மோடி என்ற தனிநபரின் வெற்றி அல்ல, தொண்டர்களுடையது: மோடி உரை

பாஜகவின் வெற்றி மோடி என்ற தனிநபரின் வெற்றி அல்ல, தொண்டர்களுடையது: மோடி உரை

Narendra Modi

Narendra Modi

இரண்டு முறை பெரும்பான்மை ஆட்சியை மக்கள் வழங்கியதால் தான் மத்திய அரசால் துணிச்சலாக பல நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

 • Share this:
  தேசிய தலைவராக ஜே.பி.நட்டா  பொறுப்பேற்ற பிறகு முதல் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று (7 நவம்பர்) நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த தேசிய செயற்குழு கூட்டம் 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. கொரோனா தாக்கத்தினால் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முதல் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நடைபெற்றது.

  பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற தேசிய செயற்குழுவில், 80 உறுப்பினர்கள், 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர உறுப்பினர்கள், மற்றவர்கள் என மொத்தம் 346 பேர் உள்ளனர். அவர்களில் 342 பேர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த 342 பேரில், 124 பேர் டெல்லியில் நேராகவும், மற்ற 218 பேர் இணைய காணொலி வழியாக அவரவர் மாநில பா.ஜ.க அலுவலங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். முந்தையக்காலம் போல இல்லாமல், படு டிஜிட்டெலாக நடைபெற்று முடிந்துள்ளது கொரோனாவுக்கு பிந்தைய முதல் செயற்குழு கூட்டம். உறுப்பினர்கள் தங்கல் வருகையைக்கூட டிஜிட்டல் முறையில் பதிவு செய்தனர்.

  இக்கூட்டத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல  தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  Also  read:  ரூ.150 தினசரி வருமானத்தில் சிறுக சேர்த்து பள்ளிக்கூடம் கட்டியவருக்கு பத்மஸ்ரீ விருது.. உத்வேக கதை

  100 கோடி தடுப்பூசி சாதனை:

  கூட்ட தொடக்கத்தில் பேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  மேற்கு வங்கத்தில் பா.ஜ.க மிக வேகமாக காலூன்றி வருவதாகவும், தற்போது அங்கு 18 மக்களவை உறுப்பினர்களும் 76 சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜக வசம் இருப்பதாகவும் தெரிவித்தார் இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், நூறு கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  முன்மொழிந்த யோகி - வழிமொழிந்த அண்ணாமலை:

  அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அவை உத்திர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள். இவற்றில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க தற்போது ஆட்சியில் இருக்கிறது. அவற்றை எப்படி தக்கவைக்க வேண்டும், என்ன அரசியல் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன போன்றவை குறித்து இந்த நான்கு மாநில பா.ஜ.க முதல்வர்களும், மாநில பா.ஜ.க தலைவர்களும் தனித்தனியே பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் செய்து தங்கள் திட்டங்களை தேசிய தலைமையுடன் விவாதித்தனர். அதுபோக, பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர் அஸ்வனி ஷர்மா, பஞ்சாப் தேர்தலுக்கான பா.ஜ.க செயல் திட்டங்களை விளக்கி தேசிய தலைமைக்கு எடுத்து கூறினார்.

  Also  read:  நாக்கை 4 துண்டாக வெட்டி விடுவேன்: பாஜக தலைவருக்கு தெலங்கானா முதல்வர் பகிரங்க மிரட்டல்

  இக்கூட்டத்தில் தேசிய அரசியல் நிலை குறித்த தீர்மானம் ஒன்றை உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்மொழிய, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழி மொழிந்து பேசினார்.

  மோடியால் அல்ல தொண்டர்களின் வெற்றி:

  இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பேசிய பிரதமர் பா.ஜ.க-வினருடன் பல கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார். இரண்டு முறை பெரும்பான்மை ஆட்சியை மக்கள் வழங்கியதால் தான் மத்திய அரசால் துணிச்சலாக பல நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததாகவும், பா.ஜ.க-வின் வெற்றி என்பது தொண்டர்களால் வருவதே ஒழிய, மோடி என்ற தனி மனிதரால் வரவில்லை என்றும் பேசினார். பல இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள் ஆகியவற்றில் பா.ஜ.க பெற்ற வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், அவை மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம் கொண்டார். ஜன சங்கம் காலம் தொட்டு பா.ஜ.க-விற்கு பாடுபட்ட தலைவர்கள், தொண்டர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் “கமல் புஷ்ப்” திட்டம் குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் அழுத்தம் கொடுத்தார்.

  Also  read:  பதவி பறிபோனால் போகட்டும்… மத்திய அரசை கடுமையாக எதிர்த்து பேசிய மேகாலயா ஆளுநர்..

  மற்றொரு பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், தனக்கு ஒரு தேசிய தலைவரையே தேர்வு செய்ய முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திணறி வருகிறது, ஆனால் பா.ஜ.க-வோ அடுத்த தேர்தல்களுக்கு தயாராகி தனது தேசிய செயற்குழு கூட்டத்தைக்கூட டிஜிட்டல் ரீதியாக நடத்தி முடித்து விட்டது. ஏன் பா.ஜ.க தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறுகிறது, ஏன் காங்கிரஸ் தொடர்ந்து  தேர்தல்களில் தோல்வியடைகிறது என்ற கேள்விக்கான விடை இதில் தான் உள்ளது.

  கட்டுரையாளர் : எஸ்.ஜி. சூர்யா, தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர்

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: