ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள ஹேமாண்டி பள்ளி கிராமத்தில் இருக்கும் விஞ்ஞான் பள்ளியில் நேற்று 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது.
அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி ஒருவரின் தலைக்குமேல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று கழன்று விழுந்தது.
இந்த சம்பவத்தில் மின்விசிறியில் ஒரு இறக்கை அந்த மாணவியின் கண்ணுக்கு கீழ்பட்டதில், அவர் லேசான காயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியை உடனடியாக அந்த மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அங்கு அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த மாணவி, தொடர்ந்து தேர்வு எழுதினார்.
Must Read : வீட்டின் மேற்கூரை இடிந்து 8 மாத கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்
அதனைத் தொடர்ந்து, அந்த பள்ளிக் கூடத்தில் உள்ள தேர்வு அறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விசிறிகளும் நேற்று ஒரு முறை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.