1986 அயோத்தியா தீர்ப்பும்... காவல் காத்த குரங்கும்...

அயோத்தி விவகாரத்தில் பலரும் அறிந்திராத கதையாக உள்ளது இந்த ஃபைசாபாத் உத்தரவு கதை

Web Desk | news18
Updated: December 6, 2018, 4:59 PM IST
1986 அயோத்தியா தீர்ப்பும்... காவல் காத்த குரங்கும்...
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி
Web Desk | news18
Updated: December 6, 2018, 4:59 PM IST
இந்தியாவில் சர்ச்சைக்குரியாக நாளாக அமைந்துவிட்டது டிசம்பர் 6. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி வரையில் இல்லாத சர்ச்சை அன்றைய தினத்தில் சூடுபிடிக்கத் தொடங்கும். இந்தாண்டு பரபரப்பு மேலும் அதிகரித்தே காணப்படுகிறது. காரணம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்.

இந்தக் கதைகளும் சர்ச்சைகளும் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் 1986-ம் ஆண்டு அயோத்தியா சர்ச்சையில் ஃபைசாபாத் தீர்ப்பு நாள் அன்று நடந்த ஒரு கதை பலரும் அறியாதது.

1986-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி அயோத்தி விவகாரத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சர்வதேச மீடியா முழுவதும் ஃபைசாபாத் நீதிமன்றம் முன்பு குவிந்திருந்தனர். அயோத்தி விவகாரத்தின் மீதான தீர்ப்பைக் கேட்க நின்றிருந்த மக்களுக்கும் பாதுகாப்புக்கு குவிந்திருந்த போலீஸாருக்கும் மத்தியில் பலரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டு நின்றிருந்தது ஒரு குரங்கு.

காலையில் நீதிமன்ற வளாகத்தில் முதல் ஆளாக வந்து நின்றிருந்த குரங்கு தொடர்ந்து வளாகக் கொடிக் கம்பத்தில் தொற்றிக்கொண்டு காத்துக்கொண்டிருந்தது. வழக்கு விசாரணை தொடங்கி மாலை 4.40 மணி அளவில் உத்தரவு வரும் வரையில் காத்துக் கொண்டிருந்தது அந்தக் குரங்கு.

ஃபைசாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி பாண்டே, சர்ச்சைக்குரிய இடத்தை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். தீர்ப்பு வெளியான பின்னர் நீதிபதி உள்பட நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த அத்தனை பேரும் களைந்து செல்ல காலையிலிருந்து நின்றிருந்த குரங்கை யாரும் கவனிக்கவில்லை.

ஆனால், மாவட்ட நீதிபதி பாண்டே உடன் இருந்த தலைமை நீதிபதி சி.டி.ராய் அந்தக் குரங்கை கவனித்துள்ளார்.  சி.டி.ராய் கூறுகையில், ‘காலையிலிருந்து நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த குரங்கு தீர்ப்பு உத்தரவுக்குப் பின்னர் காணவில்லை. ஆனால், மாவட்ட நீதிபதி பாண்டே நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற போது அங்கு வீட்டு வெராண்டாவில் அந்தக் குரங்கு காத்திருந்துள்ளது. இதைக் கண்ட நீதிபதி பாண்டேவும் அவரது பாதுகாவலர்களும் ஆச்சர்யமடைந்துள்ளனர்’ என்கிறார்.  நீதிபதி பாண்டே வீட்டுக்கு வந்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது. அதன் பின்னர் யாரும் அந்தக் குரங்கை பார்க்கவில்லையாம். இதனால், தீர்ப்பு அளித்த நீதிபதி பாதுகாப்பாக வீடு திரும்புகிறாரா என்பதை உறுதி செய்யவே ஹனுமான் அவதாரமான அந்தக் குரங்கு நீதிமன்றத்திலும் நீதிபதி வீட்டிலும் இருந்துள்ளது என உள்ளூர் மக்கள் இதுநாள் வரையிலும் நம்பி வருகின்றனர்.

மேலும் பார்க்க: தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? - பொன்னையன் பதில்
Loading...
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...