‘முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம், எழுதிக்கலாம் இல்லனா அடிச்சுருவேன்’ என மதிய வேளையில் சாப்பிடாமல் வேலை பார்க்கும் தனது ஆசிரியரை திக்கி தடுமாறி மழலை மொழியில் பேசி சாப்பிட மிரட்டும் பிரிகேஜி குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி யுள்ளது.
குழந்தைகளின் அன்பும், மழலை பேச்சும், செயல்பாடுகளும் அலாதியான இன்பம் கொடுப்பவை. அவைகளை எப்போதும் ரசித்துக்கொண்டை இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம், புனலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த குழந்தையின் பாச மிரட்டலை ஆசிரியர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
மதிய வேளையில் சிறு குழந்தைகள் முறையாக சாப்பிடுகிறார்களா என்பதை கவனிப்பது வகுப்பு ஆசிரியர்களின் வேலையும் கூட. இதை முடித்த பின்பு தான் வகுப்பு ஆசிரியர்களுக்கு சாப்பாடு. இந்த நிலையில் கொல்லம், புனலூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிரிகேஜி (pre-kg) படிக்கும் குழந்தைகள் முறையாக சாப்பிடுகிறார்களா என்பதை ஆசிரியர் ஒருவர் கவனித்துக்கு கொண்டு, தனது எழுத்து வேலையை செய்து கொண்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது, ‘சாப்பிடு, அப்புறம் எழுது என மிரட்டுகிறான் சிறு மாணவன் ஒருவன். ஆசிரியர் எதை செல்லியும் பாச மிகுதியால் ‘சாப்பிடு இல்லை அடிச்சுருவேன்’ என மிரட்டும், மிரட்டல் வீடியோவை செல்போனில் பதிவு செய்த ஆசிரியை இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Must Read : Maamanithan Review | விஜய்சேதுபதியின் மாமனிதன் எப்படி இருக்கு?
கள்ளம் கபடம் இல்லாத மனது பிள்ளை மனது என்பதை உணர்துகிறது இந்த செயல், ‘அதிர்ஷ்டம் செய்த ஆசிரியை’ என இந்த வீடியோவை பார்த்த பலரும் கூறி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.