சஞ்சீவனி பிரச்சாரம் நாட்டிற்கு இப்போது தேவைப்படுவது ஏன்?

சஞ்சீவனி பிரச்சாரம் நாட்டிற்கு இப்போது தேவைப்படுவது ஏன்?

கோப்புப் படம்

ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த உலக சுகாதார தினத்தைத் தொடங்கும் நெட்வொர்க் 18 இன் புத்தம் புதிய பிரச்சாரமான ‘சஞ்சீவானி - எ ஷாட் ஆஃப் லைஃப்’-ஐ பாருங்கள்.

  • Share this:
கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியதில் இருந்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், நகரமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சங்களை பார்த்து வருகிறது. நாம் 2ம் அலையின் மோசமான கட்டத்தில் இருந்து வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை. நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முந்தைய அலையை காட்டிலும் 2வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் இதனை தடுக்க கொரோனா தடுப்பூசி மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம் என்பதையும் நாம் அறிவோம்.

இங்கு தான் நெட்வொர்க் 18-ன் ‘Sanjeevani – A Shot Of Life’ என்ற புதிய பிரச்சார இயக்கம் நமக்கு கைகொடுக்க வருகிறது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில மாவட்டங்களில் நாட்டின் மூலைகளை சென்றடைய இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் தடுப்பூசி முயற்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று சேரும்.

கொரோனா 2ம் அலை:

இந்த பிரசாரம் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன் கொரோனா தடுப்பூசி போடுவது ஏன் தற்போதைய தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வேகமாக பரவும் இரட்டை திரிபு இந்தியாவில் இருக்கிறது என்பதை வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதவிர தென் ஆப்பிரிக்கா, பிரேசில், பிரிட்டன் வகை கொரோனாவும் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரிவர கடைப்பிடிக்கப்படாத கொரோனா விதிமுறைகள், மெதுவாக நகர்ந்து வரும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கு மத்தியில் லட்சக்கணக்கிலானவர்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருவது கொரோனா 2ம் அலையை மோசமாக்கி உள்ளது. இந்த நிலை நீடித்தால் மேலும் ஒரு பொதுமுடக்கத்தை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தும் . முதல் அலையில் இருந்து மாறுபட்டு தற்போது கொரோனாவை விரட்டியடிக்க நம்மிடையே தடுப்பூசிகள் கைவசம் உள்ளன.

சஞ்சீவனி பிரச்சாரம்:

நெட்வொர்க் 18 குழுமத்தின் இந்த பிரச்சார இயக்கம்‘Sanjeevani – A Shot At Life’ என்றழைக்கப்படுகிறது. இது பெடரல் வங்கியின் கார்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) முயற்சியின் ஒரு அங்கமும் கூட. மேலும் இந்த பிரச்சார இயக்கத்தில் சுகாதார நிபுணராக அப்போலோ 24/7 இணைந்துள்ளது. இந்த பிரச்சாரம், நெட்வொர்க் 18 -ஆல் முன்னெடுக்கப்படும் மற்றும் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான சில மாவட்டங்களில் பெடரல் வங்கி மற்றும் அப்பல்லோ 24/7 ஆகியவற்றின் பங்கேற்புடன் தடுப்பூசி தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளும்.

சஞ்சீவனி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 2 வது கொரோனா அலையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 5 கிராமங்களை தத்தெடுத்து, தங்கள் கிராமங்களில் இலவச தடுப்பூசிகளை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களில் Apollo 24/7 தடுப்பூசி முகாம்களை நடத்தும். இதில் அப்போலோவின் அனுபவமிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் மீதான மக்களின் அச்சத்தை போக்குவதுடன் மக்களை தடுப்பூசி போட முன்வர வைக்க உந்துதலை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சாரத்தின் பிராண்ட் அம்பாஸிடரான நடிகர் சோனு சூட் சஞ்சீவி பிரச்சாரத்தின் மூலம் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்துவதில் முன்மாதிரியாக அவரே தடுப்பூசி போட்டுக் கொள்வார்.

ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு சாதனை அளவான எண்ணிக்கையில் பதிவாகி வருவதால், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே.
Published by:Arun
First published: