மாதாந்திர வழிபாட்டுக்காக நாளை திறக்கப்படுகிறது சபரிமலை கோயில்!

மாதாந்திர வழிபாட்டுக்காக நாளை திறக்கப்படுகிறது சபரிமலை கோயில்!
(கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: February 12, 2020, 6:09 PM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டுக்காக நாளை நடை திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி நாளை மாலை ஐந்தரை மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழிபாட்டுக்கு பிறகு இரவு பத்தரை மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் 14-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வரும் 18-ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

18-ம் தேதி இரவு பத்தரை மணிக்கு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு, கேரள அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே, கடந்த முறையே பெண்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த முறையும் அதே வழக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also see...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading