திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகை பகுதியில் இருக்கும் நான்காவது கட்டிட தொகுதியில் இதுவரை அறை ஒன்றுக்கு நாள் வாடகை 750 ரூபாயாக இருந்தது. அங்குள்ள அறைகளை மராமத்து செய்த தேவஸ்தான நிர்வாகம் அவற்றின் வாடகையை தலா 1700 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் ஸ்பெஷல் டைப் காட்டேஜ்களின் ஒரு நாள் வாடகையை 750 ரூபாயில் இருந்து 2200 ரூபாயாக தேவஸ்தானம் திடீரென்று அதிகரித்துள்ளது. அறைகளின் வாடகையை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மூன்று மடங்காக அதிகரித்துள்ள்து பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati