புதுச்சேரியில் பால் பொருட்களின் விலை ரூ.10 வரை அதிகரிப்பு.!
புதுச்சேரியில் பால் பொருட்களின் விலை ரூ.10 வரை அதிகரிப்பு.!
பாண்லே
புதுச்சேரி அரசு சார்பில் குருமாம்பேட்டில் பாண்லே எனப்படும் பால் கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பான்லே மூலம் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம், பன்னீர் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது.
புதுச்சேரி அரசு நிறுவனம் விற்கும் நெய், ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் குருமாம்பேட்டில் பாண்லே எனப்படும் பால் கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பான்லே மூலம் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம், பன்னீர் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் விலையை பாண்லே நிறுவனம் நேற்று முதல் திடீரென உயர்த்தியுள்ளது. குறைந்தபட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 10 ரூபாய் என பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
600 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் நெய் 620 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. பத்து ரூபாய்க்கு விற்ற 100 மில்லி தயிர் 12 ரூபாயாகவும் 15 ரூபாய்க்கு விற்ற லெசி 20 ரூபாயாகவும் 80 ரூபாய்க்கு விற்ற 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
50 கிராம் பால்கோவா 20ல் இருந்து 25 ரூபாயாகவும் 40 ரூபாய்க்கு விற்ற 100 கிராம் பன்னீர் 50 ரூபாயாகவும் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பாண்லே நிறுவனம் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 30 ரூபாய்க்கு விற்ற குல்பி 35 ரூபாயாகவும் மற்ற ஐஸ்கிரீம் வகைகள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் சர்க்கரை விலை மற்றும் அட்டை பெட்டி போன்ற மூல பொருட்களின் விலை உயர்வே பால் பொருட்களின் விலையை அதிகரிக்க காரணம் என பாண்லே நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.