• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க சென்ற மாநகராட்சி பொறியாளரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்!

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க சென்ற மாநகராட்சி பொறியாளரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்!

மாநகராட்சி பொறியாளர்

மாநகராட்சி பொறியாளர்

ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டிருப்பதாக பொறியாளர் தெரிவித்த போது, கோபமடைந்த அப்பகுதி மக்கள் கற்கள், பலகைகள், கட்டைகளைக் கொண்டு அவரை தாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்.

  • Share this:
    திருப்பதி கடப்பாவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க சென்ற மாநகராட்சி பொறியாளரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள புகவொங்கா கழிவுநீர் கால்வாய் பகுதியில் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஆக்கிரமிப்புகளை காலி செய்யச் சொல்லி மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியினர் காலி செய்ய மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இதனால் மாநகராட்சி தலைமை பொறியாளர் ரகுநாத் ரெட்டி தலைமையில் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஜேசிபியை முற்றுகையிட்டு ஓட்டுநரை விரட்டிய நிலையில் அங்கிருந்த பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டிருப்பதாக பொறியாளர் தெரிவித்த போது, கோபமடைந்த அப்பகுதி மக்கள் கற்கள், பலகைகள், கட்டைகளைக் கொண்டு அவரை தாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்.

    அங்கிருந்து தப்பி ஓடிய தலைமை பொறியாளர் ரகுநாத் ரெட்டி, கடப்பா முதலாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்து மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என போலீசாருக்கு மனு அளித்துள்ளார்.

    மேலும் மாநகராட்சி தலைமை பொறியாளர் ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: