ஹோம் /நியூஸ் /இந்தியா /

அப்பா வேண்டும் என அழுத 4 வயது மகள் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!

அப்பா வேண்டும் என அழுத 4 வயது மகள் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!

மாதிரி படம்

மாதிரி படம்

கணவரின் நண்பருடன் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு தனி வீடு எடுத்து வசித்து வந்த கள்ளகாதல் ஜோடி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திராவில் பெற்ற குழந்தையையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம், கல்யாண துர்காவை சேர்ந்தவர் மாருதி நாயக்.  லாரி டிரைவர் பணியாற்றி வரும் இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு

3 மகன்களும் 4வயது பிந்து என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மாருதி நாயக் தனது நண்பரான வினோத் என்பவருடன் அவரது மனைவி கவிதா தனது மகள் பிந்து மற்றும் ஒரு மகனுடன் கவிதா திடீரென மாயமானார். இதனையடுத்து இவர்கள் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம், பத்வேலு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். கவிதா வசிக்கும் இருப்பிடத்தை அறிந்த அவரது கணவர் மாருதி நாயக் அவரது வீட்டிற்குச் சென்று தனது மகள் எங்கே என கேட்டார். அதற்கு கவிதா முன்னுக்கு முரணாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த மாருதி நாயக் இது குறித்து பத்வேலு போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத் மற்றும் கவிதாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த வாரம் பிந்து தினமும் இரவில் அப்பா வேண்டும் என அழுது கொண்டே இருந்ததால், இருவரும் சேர்ந்து பிந்துவின் கழுத்தை நெறித்து கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிந்துவின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Andhra Pradesh