ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேடையில் மக்கள் முன் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - காரணம் என்ன?

மேடையில் மக்கள் முன் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - காரணம் என்ன?

மைக் இல்லாமல் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி

மைக் இல்லாமல் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி

இரவு 10 மணிக்கு மேல் அதிக சத்தம் எழுப்பக்கூடாது என்று மைக் இல்லாமல் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  ராஜஸ்தானில் அபு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இரவு 10 மணியைக் கடந்ததால் விதிமுறைப்படி அதிக ஒலியை எழுப்பக்கூடாது என்று மைக் உபயோகிப்பதைத் தவிர்த்து மக்களிடம் நேரடியாகச் சத்தமாக உரையாற்றினார். மேலும் தாமதமாக வந்ததிற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டும், தரையில் விழுந்து வணங்கியும் உள்ளார்.

  குஜராத்தில் பல கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கிருந்து பனஸ்கந்தா பகுதியில் உள்ள அம்பாஜி கோவிலில் அம்மனை தரிசனம் செய்தார். அதன்பின்  இரவு 10 மணிக்கு ராஜஸ்தானில் அபு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களைச் சந்திக்க வந்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவர் வருவதற்குச் சிறிது தாமதம் ஆகிவிட்டது.

  இந்த நிலையில் பிரதமர் தாமதமாக வந்ததற்கு மேடையில் மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். மேலும் 10 மணிக்கு மேல் விதிமுறைப்படி அதிக ஓசையை எழுப்பக் கூடாது என்று மைக் இன்றி மக்களிடம் உரையாடினார். மேலும் மறுமுறை மீண்டும் வந்து மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார்.

  பிரதமர் மோடி விதிமுறைகள் மற்றும் சட்டத்தின் படி நடந்துகொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நிறைவில் மேடையில் மக்களை நோக்கி மூன்று முறை தரையில் விழுந்து வணங்கியுள்ளார். பிரதமரின் இந்த செயலுக்கு கூட்டத்தில் மிக பெரிய அளவில் கரகோசம் எழுப்பபட்டது.

  பிரதமரின் குஜராத்தின் அம்பாஜி பகுதியில் 7200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிகள் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்று பிரதமர் மோடியை வரவேற்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: PM Narendra Modi, Rajastan