ஹோம் /நியூஸ் /இந்தியா /

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

முகேஷ் அம்பானி, நிடா அம்பானி

முகேஷ் அம்பானி, நிடா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

    ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் சுமார் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும், மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மர்ம நபர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

    Also Read : முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்... ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மர்ம நபர் அழைப்பு

    இந்த நிலையில் பீகார் பகுதியில் உள்ள தர்பங்காவில் அந்த மர்ம நபரை இருப்பதாகக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர் பீகார் காவல்துறை உதவியுடன் நேற்று நள்ளிரவில் அந்த மிரட்டல் ஆசாமியைக் கைது செய்துள்ளனர். தற்போது பீகாரில் இருந்து மும்பைக்கு அந்த நபர் அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

    Published by:Janvi
    First published:

    Tags: Mukesh ambani, Reliance Foundation