காஷ்மீர் மறுசீரமைப்பு அமலுக்கு வந்தது!

ஒரு வாரத்திற்கு பிறகு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், இணையதள சேவை, செல்போன் சேவைகள் மீண்டும் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருகின்றன.

Web Desk | news18
Updated: August 7, 2019, 5:42 PM IST
காஷ்மீர் மறுசீரமைப்பு அமலுக்கு வந்தது!
ஜம்மு காஷ்மீர்
Web Desk | news18
Updated: August 7, 2019, 5:42 PM IST
காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதால் காஷ்மீர் பிரிவினை அமலுக்கு வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்துஸ்து வழங்கும் 370-ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இன்று காலை ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா சட்டமாக வடிவம் பெற்றுள்ளது.


இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தனிக்கொடிக்கு பதிலாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

மேலும், ஒரு வாரத்திற்கு பிறகு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், இணையதள சேவை, செல்போன் சேவைகள் மீண்டும் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்துஸ்து வழங்கும் 370-ஐ நீக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Loading...

 

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...