ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

மும்பையில் நேற்று ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

  திங்கட்கிழமை இரவு வரை 40 ஆக இருந்த தேசிய அளவிலான ஒமைக்ரான் பாதிப்பு தற்போது வரை 61 ஆக உயர்ந்துள்ளது. இதிலும் மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதால், அந்த மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

  இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லியில் 6 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3, ஆந்திரபிரதேசம் , சண்டிகர் மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மும்பையில் நேற்று ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. லண்டன் சென்று திரும்பிய ஒருவருடன் தொடர்ப்பில் இருந்ததாலேயே இவர்களுக்கு ஒமைக்கரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  Must Read : சென்னையில் 2,100 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

  தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 5 பேருக்கு மட்டும் லேசான அறிகுறிகள் இருப்பதாக மராட்டிய மாநில சுகாராத துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒமைக்கரானால் பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Omicron