ஆந்திராவின் ஆளுநரா! மறுத்த சுஸ்மா சுவராஜ்; வாழ்த்து கூறி பல்பு வாங்கிய மத்திய அமைச்சர்

ஆந்திர பிரதேச மாநில ஆளுநராக சுஸ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி உறுதிபடுத்தப்படாத நிலையிலேயே பல ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியானது.

news18
Updated: June 10, 2019, 11:13 PM IST
ஆந்திராவின் ஆளுநரா! மறுத்த சுஸ்மா சுவராஜ்; வாழ்த்து கூறி பல்பு வாங்கிய மத்திய அமைச்சர்
சுஷ்மா ஸ்வராஜ்,
news18
Updated: June 10, 2019, 11:13 PM IST
ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதாக வரும் செய்தி தவறானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற பா.ஜ.க, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இரண்டாவது முறையாக மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் சுஸ்மா சுவராஜ் இடம்பெறவில்லை.

மோடியின் கடந்த ஆட்சியில் சுஸ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவிவகித்தார். உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது காரணமாகவும் அமைச்சரவையில் அவர் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர பிரதேச மாநில ஆளுநராக சுஸ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி உறுதிபடுத்தப்படாத நிலையிலேயே பல ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியானது.இந்தநிலையில், இதுகுறித்த சுஸ்மா சுவராஜ் ட்விட்டர் பதிவில், ‘ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது’ என்று பதிவிட்டுள்ளார்.முன்னதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ‘ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஸ்மா சுவராஜுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டிருந்தார். பின்னர், அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.

Also see:
First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...