ஹோம் /நியூஸ் /இந்தியா /

தாயிடம் இருந்து கைக்குழந்தையைப் பறிக்க முயன்ற குரங்கு - காயத்துடன் குழந்தை மீட்பு... அதிர்ச்சி சம்பவம்!

தாயிடம் இருந்து கைக்குழந்தையைப் பறிக்க முயன்ற குரங்கு - காயத்துடன் குழந்தை மீட்பு... அதிர்ச்சி சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒரு மாத கைக்குழந்தையை விடாமல் பிடித்துப் பறிக்க முயன்ற குரங்கிடம் இருந்து குழந்தையைத் தாய் காப்பாற்றியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  மும்பையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த குரங்கு ஒன்று அங்கு இருந்த அம்மாவிடம் இருந்து கைக்குழந்தையைப் பறிக்க முயன்று காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷில் டைகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த குரங்கு காவல் நிலையத்திற்குள் புகுந்து அந்த பெண்ணிடம் இருந்து குழந்தையைப் பறிக்க முயன்றுள்ளது. குழந்தையின் தாய் குழந்தையை இருக்கமாகப் பிடித்துக்கொண்ட போதிலும் குரங்கு விடாமல் குழந்தையை இழுக்கத் தாய் பெரும் போராட்டத்திற்குப் பின்பு குழந்தையை மீட்டுள்ளார்.

  குரங்கு விடாப்பிடியாகப் பிடித்ததில் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திலிருந்த காவலர்கள் குரங்கை விரட்ட முயற்சி செய்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

  Also Read : இமாச்சல்பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 ஐஐடி மாணவர்கள் உள்பட 10 பேர் பலி

  குழந்தையின் தாய் இது குறித்துத் தெரிவிக்கையில், காவல் நிலையத்தில் நுழைந்த குரங்கை விரட்ட முயன்றபோது அது என்னுடைய குழந்தையைப் பிடித்துக்கொண்டு விடவே இல்லை. எப்படியோ குழந்தையைக் காப்பாற்றி விட்டேன் என்று கூறினார்.

  குரங்கு பலமாக பிடிங்கியத்தில் குழந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்குத் தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் தற்போது குழந்தை நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறையினர் காவல் நிலையத்திலிருந்த குரங்கைப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Monkey, Mumbai