காங்கிரஸ் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்! நிதிஷ் குமார்

நான், ஊடங்களை விட்டு தொலைவில் இருக்கிறேன் என்று கூற முடியாது. நான் மக்களுடன் உரையாடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

காங்கிரஸ் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்! நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
  • News18
  • Last Updated: April 3, 2019, 11:56 PM IST
  • Share this:
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று பீகார் முதல்வர் நிதிஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல, ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘நான் அமைதியாக இருக்கவில்லை. நான் என்னுடைய வேலையை செய்துக் கொண்டிருக்கிறேன். ஊடகங்களின் கண்களுக்கு நான் செய்த வேலைகள் வரும்போது, அவர்கள் அதற்கு வினையாற்றுகிறார்கள். தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களைச் சந்திப்பது என்னுடைய இயல்பு கிடையாது.


நான், ஊடங்களை விட்டு தொலைவில் இருக்கிறேன் என்று கூற முடியாது. நான் மக்களுடன் உரையாடிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் மக்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தேவையான கேள்விகளை அவர்கள் கேட்க முடியும். நான், மோடியின் முகத்தை முன்னிறுத்திதான் தேர்தலைச் சந்திக்கிறேன். நாடு முழுமைக்கும் மோடி செய்ததும், பீகாருக்கு பிரத்யேகமாக நான் செய்ததும் மக்கள் கண்முன் வரும். இருவருடைய செயல்பாடும் மாநிலத்தில் எங்களுக்கு நல்லச் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மீது சிறுபான்மையினர் நம்பிக்கையை இழந்துவிட்டனர்’ என்று தெரிவித்தார்.
First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்