நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி உரை

இப்புதிய பட்ஜெட் மூலம் நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறுவர். நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி உரை
  • News18
  • Last Updated: July 5, 2019, 2:16 PM IST
  • Share this:
மத்திய பட்ஜெட் 2019 குறித்து தனது கருத்தை ட்விட்டர் லைவ் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய பட்ஜெட் உரை நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த உடன் பிரதமர் மோடி ட்விட்டரில் பட்ஜெட் குறித்தான தனது கருத்தை ட்விட்டர் லைவ் மூலம் வெளிப்படுத்தினார். பிரதமர் மோடி கூறுகையில், “இப்புதிய பட்ஜெட் மூலம் நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறுவர். நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

வரி விதிப்பு முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் நாகரிகமாக்கப்படும். நாட்டின் விவசாயத் துறையை புதிய மாற்றத்துக்கான பாதையில் அழைத்துச் செல்ல மிகவும் உபயோகமான ஒரு வழிகாட்டியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மிகச்சிறந்த நம்பிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “உட்மொத்த நாட்டின் வளர்ச்சிக்காக மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 130 கோடி இந்தியர்களால் வளரும் நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளின் கனவுகளுக்கான சிறகுகளை அளித்துள்ளது இந்த பட்ஜெட்” என்றார்.

மேலும் பார்க்க: பட்ஜெட் 2019 - வரிகள் அதிகரிப்பால் பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்கிறது
First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்