ஹோம் /நியூஸ் /இந்தியா /

பத்ம பூஷன் விருது.. ஜனவரியில் இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர்!

பத்ம பூஷன் விருது.. ஜனவரியில் இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் அதிகாரியுமான சத்ய நாதெல்லா

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் அதிகாரியுமான சத்ய நாதெல்லா

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாதெல்லா இந்தியா வருவதற்கு திட்டமிட்டு வருகிறார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் அதிகாரியுமான சத்ய நாதெல்லாவுக்கு, கிடைத்துள்ளது என்று அந்நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. சத்ய நாதெல்லா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வருவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் டி.வி.நாகேந்திர பிரசாத்தை நாதெல்லா சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

  இதுகுறித்து சத்ய நாதெல்லா வெளியிட்ட அறிக்கையில், “நாம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார, சமூக, தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அடுத்து வரும் காலங்களை நிர்ணயிக்கப் போவது டிஜிட்டல் தொழில்நுட்பம் தான். இந்திய தொழில்துறை மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உத்திகளை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன. சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் புத்தாக்க சிந்தனைகளுக்கு இது வழிவகுக்கும்’’ என்றும் நாதெல்லா தெரிவித்துள்ளார்.

  Read More : 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மெகா திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

  இந்தியாவின் வளர்ச்சி இலக்கு மற்றும் உலக அளவில் அரசியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியா தலைமையேற்பதற்கான திறன் ஆகியவை குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

  பல்துறைகளில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் மூன்றாவது பெரிய விருது பத்ம பூஷன் ஆகும். இந்த ஆண்டில் இந்த விருதுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சத்ய நாதெல்லாவும் ஒருவர். அமெரிக்காவுக்கான இந்திய தூதரை அவர் சந்தித்துப் பேசியபோது இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

  இதுகுறித்து நாதெல்லா கூறுகையில், “பத்ம பூஷன் விருது பெறுவது கௌரவமாக உள்ளது. சிறப்புவாய்ந்த மக்கள் பலருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும். எனக்கு பத்ம பூஷன் விருது வழங்கியதற்காக இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தொழில்நுட்பத்தை மேலும் பயன்படுத்தி பலன் அடைந்திட நான் தொடர்ந்து செயலாற்றுவேன்’’ என்று கூறினார்.

  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாதெல்லா இந்தியா வருவதற்கு திட்டமிட்டு வருகிறார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

  தெலுங்கானா மாநிலத்தின் ஹைதரபாத் நகரில் பிறந்தவரான சத்ய நாதெல்லா, கர்நாடகாவில் பொறியியல் கல்வி பைத்து முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று எம்.எஸ்., எம்பிஏ ஆகிய கல்விகளை முடித்த அவர் 1992ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 2014ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Microsoft, Padma Awards