• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்லை - மருத்துவ நிபுணர்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்லை - மருத்துவ நிபுணர்

குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை

குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை

கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்குத்தான் போட வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகளை பெரியவர்கள்தான் பின்பற்ற வேண்டும்.

  • Share this:
    பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள் என்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது என்பதால், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சமிரன் பாண்டா கூறுகையில், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஒழுங்குமுறை முடிவு. எனினும், பொது சுகாதாரத்துறையின் பதிலளிப்பை கருத்தில் கொண்டால், பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குழந்தைகள் காரணமாக இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது.

    கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு போடுவதற்கான அங்கீகாரம் பெறுகிற எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிக்கான கடைசி ஆணியாக அமைந்து விடாது. குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை. எனவே கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்குத்தான் போட வேண்டும். அதேபோல, கொரோனா காலத்தில் உரிய கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளையும் பெரியவர்கள்தான் பின்பற்ற வேண்டும்.

    பெரியவர்களிலும் குறிப்பாக, நோய் தெற்று பாதிக்கப்படுகிற பிரிவினராக உள்ள முதியவர்கள், இணை நோய் இருப்பவர்கள் போன்றவர்களுக்கான தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தவரையில், மிகக்குறைந்த அளவில்தான் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் பல்வேறு ஆதாரங்கள் நமக்குக் காட்டுகின்றன.

    Must Read : தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    குழந்தைகள் கொரோனா வைரசின் மோசமான பாதிப்புகளை, பெரியவர்களைப் போல சந்திக்க மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பயனற்றதாகத்தான் அமையும் இவ்வாறு கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: