சென்னையில் கடந்த சனிக்கிழமை தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்று, இன்று புதுச்சேரி வந்துள்ளது. புதுச்சேரியில் கப்பலை அனுமதிக்கக்கூடாது என
காங்கிரஸ்,
அதிமுக மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது கப்பல் புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்துள்ளது.
கப்பலில் சூதாட்டம் நடைபெறுவதால் புதுச்சேரியில் கப்பலை அனுமதிக்கக்கூடாது, மீறினால் கலாச்சாரம் சீர்குலையும் என பலரும் வலியுறுத்தும் நிலையில், கப்பல் 12 நாட்டிக்கல் மைல் தாண்டி தான் நிற்கும். அதற்கு மாநில அரசு அனுமதி தேவையில்லை. பயணிகளை இறக்க தான் அனுமதி தேவை. அதே நேரத்தில் சூதாட்டம் நடந்தால் அனுமதிக்க முடியாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும், 16 நாட்டிகல்லுக்கு மேலே சென்றால் தான் கேசினோ விளையாட்டு மதுபானங்கள் வழங்கப்படும், என கப்பல் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கப்பல் புதுச்சேரி கடற்கரையில் 3 நாட்டிகல் அளவில் நிற்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது வரை கப்பலுக்கு அனுமதி வழங்காத நிலையில் பயணிகள் யாரேனும் கரை இறங்கினால் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
Must Read : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? புதிய கட்டணம் பரிந்துரை
இந்நிலையில், புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி இறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.