மக்களவை சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா..?

57 வயதான ஓம் பிர்லா இதுவரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், இரண்டு முறை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

மக்களவை சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா..?
எம்.பி ஓம் பிர்லா
  • News18
  • Last Updated: June 18, 2019, 11:30 AM IST
  • Share this:
17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா முன்மொழியப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்.பி ஆக வெற்றி பெற்றுள்ளவர் ஓம் பிர்லா. பாஜக எம்.பி ஆன இவரை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜக, சபாநாயகராகத் தேர்ந்தெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மக்களவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால், இதுவரையில் எதிர்கட்சியினர் சார்பில் சபாநாயகர் வேட்பாளராக யாரையும் முன்மொழியவில்லை.


57 வயதான ஓம் பிர்லா இதுவரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், இரண்டு முறை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார். பாஜக-வின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி இதே கோட்டா தொகுதியிலிருந்துதான் ஒரு அடிமட்டத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: தொடங்கியது 17-வது மக்களவையின் முதற்கூட்டம் - முதலாவதாக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு
First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்