Home /News /national /

மனைவியைப் பிற பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் கொடுமையாகும் - உயர் நீதிமன்றம் அதிரடி

மனைவியைப் பிற பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் கொடுமையாகும் - உயர் நீதிமன்றம் அதிரடி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கேரள உயர் நீதிமன்றத்தில் மனைவியைப் பிற பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது மனதளவில் ஏற்படுத்தும் கொடுமை என்று கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கேரள உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை விவாகரத்து தொடர்பாக மேல்முறையீட்டுக்கு வந்த வழக்கில், கணவன் தன் மனைவியைப் பிற பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது மனைவிக்கு மன உளைச்சலைத் தருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.

    கேரளாவில் திருமணமாகி ஒரு மாதத்திலேயே சேர்ந்து வாழாமல் கணவன் மனைவி பிரிந்த நிலையில், மனைவி விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் 10 மாதங்கள் கழித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர், தனது கணவன் தன்னை பிற பெண்களுடன் ஒப்பிட்டுத் தாழ்த்தி பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கில் மனைவிக்குக் கணவனிடம் இருந்து விவாகரத்து கொடுத்துள்ளனர். இந்த தீர்ப்பை ஏற்காத கணவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

    அந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனைவி தரப்பில் கூறியதாவது, தனது கணவர் தன்னை மனைவியாகப் பார்க்கவில்லை என்றும் மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு நான் அவர்கள் போல் அழகாக இல்லை என்றும் பேசுவார் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவருக்கு நான் சரியான நிகர் இல்லை என்றும் 2019ம் ஆண்டு திருமணம் ஆனது முதல் என்னை ஒரு பொருளாகத்தான் பார்த்துள்ளார் என்று நீதிமன்றத்தில் மனைவி தெரிவித்துள்ளார்.

    Also Read : கட்டணமில்லா கல்வியும், குடிநீரும் இலவச திட்டங்களா? இலவசங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

    இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் விசாரணை நடத்தி மனைவியின் வாதத்தை ஏற்றுக்கொண்டு விவாகரத்து செல்லும் என்றும் கணவனின் மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும் வாய்வழியில் ஒருவரைத் துன்புறுத்தும் வகையில் சொற்களைப் பேசுவது என்பது மனதளவில் ஒருவருக்கு நிகழ்த்தும் கொடுமையாகும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மனைவியை வேறு பெண்களுடன் இணைத்துப் பேசுவது, தனக்குச் சரியான நிகர் இல்லை என்று கூறுவது, மனைவிக்கு பெரும் மன உளைச்சலைத் தரும். இது வாய்வழியாகக் கொடுமைப் படுத்துதல் ஆகும். மனைவி அதனைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Divorce, Kerala high court, Mental Stress, Verbally harrased

    அடுத்த செய்தி