ஹோம் /நியூஸ் /இந்தியா /

நவம்பர் 16 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

நவம்பர் 16 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

சபரிமலை கோவில்

சபரிமலை கோவில்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி முதல் பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

  கடவுளை வணங்குவதில் ஆணும் பெண்ணும் சமம் என்று கூறி, கடந்த மாதம் 28-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பிற்கு ஒரு தரப்பினர் ஆதரவையும், ஒரு தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை கோவில் திறக்கப்பட உள்ளது.

  வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதால், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர முடியாத சூழல் நிலவுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் போது பெண்களும் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கூறியுள்ளது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Kerala government, Sabarimala Ayyappan, Sabarimala temple issue, Womens in sabarimala