தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது படம் மட்டும்தான். அது எந்தக் கட்சிக்கும் தேர்தலின்போது உதவாது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
1990-ல் நடந்த காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவிஜோஷி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஒரு தரப்பினர் கொண்டாடியும், இன்னொரு தரப்பினர் உண்மைக்கு புறம்பான தகவல்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறி எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். படக்குழுவினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க - பீகாரில் லாக்கப் மரணம்: 3 காவல் நிலையங்கள் சூறை.. உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு!
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், அரியானா, கோவா, குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘காஷ்மீர் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது ஒரு படம் மட்டும்தான். அந்தப் படம் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் உதவாது என்று கருதுகிறேன்.
இதையும் படிங்க - 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை.. பதவியேற்றதுமே பம்பர் அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப் முதல்வர்
படத்தில் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையா பொய்யா என்பது குறித்து பின்னர் விவாதிக்கலாம். ஆனால் படத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் பல படத்தில் இடம்பெறவில்லை.
பண்டிட்டுகள் வெளியேற்றம் நடந்தபோது முஸ்லிம்களும் உயிரிழந்தார்கள். ஏராளமான அதிகாரிகளை முஸ்லிம்கள் காப்பாற்றியுள்ளனர். இவையெல்லாம் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இடம்பெறவில்லை’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.