Home /News /national /

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: அனைவரும் பார்க்க வேண்டுமென்றால் யூ டியூபில் ரிலீஸ் செய்யுங்க - ஆம் ஆத்மி

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: அனைவரும் பார்க்க வேண்டுமென்றால் யூ டியூபில் ரிலீஸ் செய்யுங்க - ஆம் ஆத்மி

காஷ்மீர் ஃபைல்ஸ்

காஷ்மீர் ஃபைல்ஸ்

காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட இந்த 25 ஆண்டுகளில், மத்தியில் பாஜக 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் திரும்ப என்ன மாதிரியான நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
    தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்  ஈட்டிய ரூ. 200 கோடி லாப பணம், காஷ்மீர் பண்டிட்டுகளின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வலியுறுத்தியுள்ளார்.

    சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படக்குழுவினரை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். மத்திய பிரதேசம் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன.

    இதையும் படிங்க - ''ஆம் ஆத்மி வளர்ச்சியை பார்த்து பாஜக பயந்துவிட்டது'' - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தாக்கு

    தமிழகத்திலும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொண்டு வருகிறது. டெல்லி சட்டமன்றத்தில் பேசிய பாஜக உறுப்பினர்கள் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு டெல்லி அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

    இதையும் படிங்க - நிதி மசோதா நிறைவேற்றம்: கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கும் நடைமுறை ஏப்.1 முதல் அமல்!

    இதற்கு பதில் அளித்த முதல்வர் கெஜ்ரிவால், ''தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும்" என்று கூறியிருந்தார். இதன்பின்னரும் படத்தை விமர்சித்த கெஜ்ரிவால்,

    ''ஒரு படத்தில் யாருடைய துயரையோ ஆவணப்படுத்தி அதன் மூலம் ஆதாயமும், பணமும் ஈட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. இது ஒரு குற்றம். இதனை இந்தியா பொறுத்துக் கொள்ளாது.

    காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட இந்த 25 ஆண்டுகளில், மத்தியில் பாஜக 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. இந்த 8 ஆண்டுகளில், காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் திரும்ப என்ன மாதிரியான நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது?. இதுவரை ஒரு பண்டிட் குடும்பம் கூட அங்கு திரும்பியதாகத் தெரியவில்லை." என்று விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம் குறித்து பேசிய டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மனிஷ் சிசோடியா, 'காஷ்மீர் மக்களின் வலி ரூ. 200 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வசூலித்த ரூ. 200 கோடி காஷ்மீர் பண்டிட்டுகளின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

    தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அதனை எல்லோரும் பார்ப்பார்கள்.' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Aam Aadmi Party, BJP, The Kashmir Files

    அடுத்த செய்தி