கேரள மாநிலம் வாகமண் பகுதியில் மலைகளுக்கு இடையே நடந்த ஆஃப் ரோடு (off-road) ஜீப் ரேசில் தலைக்குப்புற மூன்று முறை கவிழ்ந்த ஜீப் பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமண் என்ற பகுதியில் மலை முகடுகளுக்கு இடையே அவ்வப்போது முறையான அனுமதி பெறாமல் ஆஃப் ரோடு (off- Road) ஜீப் ரேஸ் நடப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்றைய தினம் முறையான அனுமதி பெறாமல் ஆஃப் ரோடு பிரியர்கள் அமைப்பு ஒன்று வாகமண் பகுதியில் ரேஸ் வைத்துள்ளதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
இதில் பல ஜீப் ஓட்டுனர்களும் கலந்து கொண்டு தங்களின் ஜீப் ஒட்டும் திறமையை காண்பித்தனர். இதில் ஒரு ஒட்டுனர் ஒட்டிய ஜீப் திடீரென 3 முறை தலைக்குப்புற கவிழ்ந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்த ஜீப்பை மீண்டும் இயக்கிய ஒட்டுனர் மலைமுகட்டில் கொண்டு வந்தார்.

ஆஃப் ரோடு ஜீப் ரேஸ்
Must Read : பச்சிளம் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் - ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்!
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் கேரள வனத்துறையும் , கேரள போக்குவரத்து துறையும் முறையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.