முதுகை படியாக்கிய மீனவ இளைஞருக்கு குவியும் பாராட்டுகளும்... பரிசுகளும்...

பெண்கள் படகில் ஏற உதவிய மீனவர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கேரள வெள்ளத்தின் போது பெண்களும், வயதானவர்களும் படகில் ஏற மண்டியிட்டு உதவிய மீனவர் ஜெய்சாலுக்கு பாராட்டுகளும் நிதியுதவிகளும் குவிந்து வருகின்றது.

  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், 13 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டது. கேரளா இதுவரை சந்தித்திராத மாபெரும் இழப்பை கடந்த மாதம் சந்தித்தது. கேரள வெள்ளத்தால் அம்மாநிலத்தில் பலர் உயிரிழந்தனர். இந்தியாவின் தேசிய பேரிடராக கேரளா வெள்ளத்தை மத்திய அரசு அறிவித்தது.

  வெள்ளத்தில் பாதித்தவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், கேரள மீனவர் ஜெய்சால் தன்னார்வ மீட்புக்குழுவுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டு வந்தார். அப்போது பெண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் படகில் ஏறுவதற்கு சிரமப்படுவதை பார்த்த அவர், உடனடியாக தண்ணீரில்  மண்டியிட்டு தனது முதுகை படியாக்கி அவர்கள் படகில் ஏற உதவினார்.

  இவரது இந்த சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்த நிலையில், மீன்வர் ஜெய்ஷாலுவின் இந்த சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் புதிய காரை பரிசாக வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது, மீனவர் ஜெய்சாலுக்கு சன்னி யுவஜன சங்கம் என்ற இஸ்லாமிய அமைப்பு புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. தன்னுடைய வாழ்வில் ஒரு சொந்த வீடு கிடைக்கும் என தான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை எனவும் ஜெய்சால் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

  மலையாள திரைப்பட இயக்குனர் வினயன் மீனவர் ஜெய்ஷாலுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து முதல்முறையாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vinothini Aandisamy
  First published: