Home /News /national /

கண்ணுக்கு அடியில் சிக்கிய டூத்பிரஸ்; குழந்தைக்கு பல் துலக்கிய போது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

கண்ணுக்கு அடியில் சிக்கிய டூத்பிரஸ்; குழந்தைக்கு பல் துலக்கிய போது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

கண்ணுக்கு அடியில் சிக்கிய டூத்பிரஸ்

கண்ணுக்கு அடியில் சிக்கிய டூத்பிரஸ்

வினோதாவின் கண்களில் குத்தியிருந்த டூத்பிரஸை குடும்பத்தினர் அகற்ற முயன்றுள்ளனர். இதனால் உடைத்து போன அந்த பிரஸ், இன்னும் ஆழமாக சிக்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Karnataka, India
  அன்றாட வாழ்க்கையில் செல்போன், டி.வி, சோசியல் மீடியா மூலமாக தினந்தோறும் நாட்டில் நடக்கும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் பற்றி அறிந்து கொள்கிறோம். அதில் எதிர்பாராத விதமாக நடக்கும் சில விநோதமான விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துவதோடு, எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இருக்கும். சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பல் துலக்கிக் கொண்டிருந்த போது, குழந்தை தள்ளிவிட்டதால் பிரஸ் கண்ணுக்கு அடியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  தற்போது அந்த பெண்ணுக்கு நல்ல படியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கண்ணுக்கு அடியில் சிக்கிய டூத்பிரஸ் நீக்கப்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஹாவேரி மாவட்டம், ஹங்கல் அருகே உள்ள ஹிரூர் கிராமத்தைச் சேர்ந்த வினோதா தல்வார் என்ற பெண்மணி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதி அன்று அதிகாலை எழுந்து வழக்கம் போல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார். தனது நான்கு வயது மகளை எழுப்பி, டூத்பிரஸை தனது கையில் வைத்து குழந்தைக்கு பல் துலக்கியுள்ளார். வழக்கமாக குழந்தையும் பல் துலக்க முரண்டு பிடித்துள்ளது.

  ஒரு கட்டத்தில் வேண்டாவே வேண்டாம் என குழந்தை வினோதாவின் கையில் இருந்த டூத்பிரஸை தள்ளிவிட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டூத்பிரஸ் வினோதாவின் இடது கண்ணுக்கு கீழ் பகுதியில் சொருகியுள்ளது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வினோதாவின் கண்களில் குத்தியிருந்த டூத்பிரஸை அகற்ற முயன்றுள்ளனர். இதனால் உடைத்து போன அந்த பிரஸ், இன்னும் ஆழமாக சிக்கியுள்ளது.

  Read More : ஓட ஓட துரத்திய உலகின் மிகக் கொடிய பறவை.. உயிர் தப்பிய திக் திக் வீடியோ!


  நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த உறவினர்கள், வினோதாவை உடனடியாக ஹாவேரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில், ஹுப்பள்ளியில் உள்ள கர்நாடக மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (கிம்ஸ்) மாற்றப்பட்டுள்ளார்.அங்கு வினோதாவிற்கு CT ஸ்கேன், CT ஆஞ்சியோகிராம் முக அமைப்பு மற்றும் தேவையான அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. பல கட்ட பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு வினோதாவின் கண்களுக்கு கீழ் சிக்கியிருந்த 7 அங்குல டூத்பிரஸ் துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

  விபத்து நடந்து 3 நாட்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும் தற்போது வினோதா நன்றாக இருப்பதாகவும், இந்த அறுவை சிகிச்சையை கவனமாக கையாளாமல் இருந்திருந்தால் 28 வயதான வினோதாவின் ஒரு கண் பார்வை நிரந்தரமாக பறிபோயிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  எனவே தான் ஓரல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கண் மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று சேர்ந்து பெண்ணின் கண் பார்வையை பாதிக்காத வண்ணம் டூத் பிரஸை அகற்ற முயன்று, தற்போது வெற்றியும் கண்டுள்ளனர்.

  கிம்ஸின் ஓரல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் டாக்டர் மஞ்சுநாத் விஜாபூர் கூறுகையில் “இது ஒரு அபூர்வமான அறுவை சிகிச்சை. முகத்தில் 7-8 செமீ ஆழமான காயத்துடன் கண்ணுக்கு அடியில் துளைக்கப்பட்ட பிளாஸ்டிக் டூத்பிரஸின் 7 செமீ உடைந்த பகுதியை அகற்றியுள்ளோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நன்றாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார். இதே நிபுணர்கள் குழு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து ஒரு மனிதனின் முகத்தில் இருந்து 6 செமீ கத்தியை அகற்றியதாக குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Karnataka, Viral

  அடுத்த செய்தி