Home /News /national /

இலவச திட்டங்களில் மறைந்துள்ள ஆபத்தான பாதகங்கள் - விரிவான அலசல்

இலவச திட்டங்களில் மறைந்துள்ள ஆபத்தான பாதகங்கள் - விரிவான அலசல்

தேர்தல் வாக்குறுதி குறித்து மனஸ் சக்ரவர்த்தியின் இலவச கட்டுரை

தேர்தல் வாக்குறுதி குறித்து மனஸ் சக்ரவர்த்தியின் இலவச கட்டுரை

அரசியல் கட்சிகள் தங்கள் தளத்தில் தேர்தல் இலவச வாக்குறுதி குறித்து தீவிரமாக விவதிக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Delhi, India
  - மனஸ் சகர்வர்த்தி

  பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பழமொழிக்கு ஏற்ப தேர்தலில் இலவச திட்டங்கள் வாக்குறுதிகளை மக்களுக்கு சொல்லி மக்களை ஆசைக்கு மயங்க வைக்கும் போக்கு ஆபத்தானது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பந்தேல்கண்ட் எக்ஸ்பிரெஸ்வே திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், வாக்குகளுக்காக இலவச வாக்குறுதிகளை கூறுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக நின்று இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். இந்த போக்கில் ஆட்சி நடத்துபவர்கள் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற திட்டங்களை செயல்படுத்த மாட்டார்கள். ஆனால், இவை தான் வளர்ச்சிக்கு அடித்தளம் என எச்சரித்தார்.

  இலவசம் என்ற தற்காலிக ஆசையை காட்டி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் கொள்கை இது என்பதே பிரதமர் மோடி பேசியதன் மையக் கருத்து. இந்த கருத்து மறைமுகமாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகளை குறிப்பிட்டு சாடுவதாகவே உள்ளது.

  இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், ஆம் ஆத்மி அதற்கான ஆயத்தங்களை இப்போது தொடங்கிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

  இதற்கான ஆண்டு செலவு ரூ.8,700 கோடி ஆகும். ஏற்கனவே, மாநிலத்தின் மின்துறை சுமார் 2.40 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள நிலையில், இது போன்ற வாக்குறுதி அளித்தால் இந்த துறையில் முதலீடு செய்ய யார் வருவார்கள். இதைவிட முக்கியமாக மானியம் இலவசம் போன்ற திட்டங்களால் துறையில் ஆக்கப்பூர்வமான போட்டியானது இல்லை. OECD அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தரமான மின் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 108 ஆவது இடத்தில் உள்ளது.

  இந்த இலவச திட்டங்கள் மட்டுமல்ல, விவசாய வருவாய்க்கு வருமான வரி இல்லை என்பதும், கரும்பு விவசாயத்துறையில் கட்டுப்படுத்தப்படாத மானியமும், உர மானியத்தால் நீர் மற்றும் மண் வளம் சந்திக்கும் அபாயம் போன்றவற்றை கவனித்து நாம் விவாதிக்க வேண்டும்.

  இதை விட மோசமாக லேப்டாப், டிவி தொடங்கி, இலவச தாலி, ஆடுகள் என தேர்தல் கால வாக்குறுதிகள் வரையறை அன்றி அள்ளி வழங்கப்படுகின்றன.

  பிரதமரின் இந்த கருத்துக்கு பதில் அளித்த கெஜ்ரிவால் இலவச கல்வி, சுகாதராம் போன்றவற்றை டெல்லி அரசு வழங்குகிறது. அதையும் மீறி பட்ஜெட்டில் இடம் இருப்பதால் தான் இலவச மின்சாரம் தருகிறோம் என்று கூறியுள்ளார்.

  மாநிலத்தின் பட்ஜெட்டில் இடம் கொடுத்தால் மானியம் தருவதில் தவறு இல்லை. அதேவேளை, அந்த மானியம் வேறு பிரயோஜனமான வழிகளில் பயன்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வியாக எழுகிறது. இந்த மானியத்தின் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதே பிரதமரின் கருத்து.

  எந்த ஒரு நாடும் சிறந்த வளர்ச்சியை பெற வேண்டும் என்றால் வளத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லை. ஜப்பான், தென் கொரியா, பின்னர் சீனா என அனைத்து நாடுகளும் உட்கட்டமைப்பை மேம்படுத்தி தான் வளர்ச்சியை பெற்றுள்ளன.

  மூலதன உருவாக்கம் தான் வளர்ச்சிக்கான முதன்மை அங்கம். எந்த பொருளாதார கொள்கைக்கும் இதுவே அடிப்படை. பிரிட்டன் தனது காலனி நாடுகளை சுரண்டு மூலதனத்தை உருவாக்கியது. சோவியத் ரஷ்யா அரசுடைமை கொள்கையை கொண்டு அதை உருவாக்கியது. சீனாவின் டெங் ஜாங்பிங் கூட, முதலில் சிலர் பணக்காரர்களாக உருவாகுவார்கள். அதன் மூலமாகவே நீண்ட கால வளர்ச்சி ஏற்படும் என்றுள்ளார்.

  இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து பின்னுக்கு தள்ளும் 'இலவச திட்ட' கலாசாரம்

  வளம் என்று ஒன்று இருந்தால் தான் அதை மக்களுக்கு பகிரந்து தர முடியும். அனைத்து சமூக நில திட்டங்களையும் நாம் இலவசம் எனக் கூற முடியாது. கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு வழங்கும் தொகை இலவசமாக கருதக்கூடாது.

  தொழில் சூழலை உருவாக்க சில கவர்ச்சி அறிவிப்புகள் தேவைதான். அதேவேளை, இதன் அளவு, தேவை ஆகியவற்றை கவனமாக கையாள வேண்டும். நமது உடையின் தேவையின் தன்மைக்கு ஏற்ப தான் துணிகளை வாங்க வேண்டும்.

  இதற்கு இலங்கையே சிறந்த உதாரணம். ஐஎம்ஃஎப் அமைப்பு இலங்கைக்கு 2005ஆம் ஆண்டே தனது அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி பற்றாக்குறையை இலங்கை கொண்டுள்ளது.இதன் காரணமாக பொதுக் கடன் உயர்ந்து தனியார் முதலீடு ஸ்தம்பித்துள்ளது. இதை அரசு நீண்ட கால திட்டத்தில் சீர் செய்ய வேண்டும் என 2005 இல் எச்சரித்துள்ளது. ஆனால் அது நிகழவில்லை.

  இந்தியாவை நாம் இலங்கையுடன் ஒப்பிட தேவையில்லை. கடந்தாண்டு இந்தியாவின் கடன் ஓராளவு உயர்ந்தாலும், அது நிலையான அளவில் தான் உள்ளது. சர்வதேச அமைப்புகளின் தரவுகள் படி இந்தியாவின் சூழல் பாதுகாப்பாகவே உள்ளது.

  இந்த பின்னணியில் தான் உச்ச நீதிமன்றம் இந்த இலவச வாக்குறுதி கலாசாரத்திற்கு முடிவு வேண்டும் என தேர்தல் ஆணையம், நிதி ஆணையம், ஆர்பிஐ, நிதி ஆயோக், அரசியல் கட்சி நிபுணர்கள் ஆகியோரை ஒன்றினைந்து ஆலோசித்து பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியுள்ளது.

  இதற்கு ஒரு நல்ல வழி என்பது தேர்தல் வாக்குறுதிகள் மூலம் திட்டத்திற்கான செலவையும் தோராயமாக கணக்கிட்டு மக்கள் முன் வைக்க வேண்டும் என்பது. தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும், IGIDR கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் எஸ் சந்திரசேகர் வலியுறுத்தி வருகிறார்.

  இதையும் படிங்க: மானியங்கள் பயனாளர்களை முறையாக சென்று சேர்கிறதா.. இந்திய ஏழைகளின் தேவை என்ன?

  மாநிலங்கள், பல்வேறு கட்சிகள் கொண்ட இந்திய ஜனநாயக அமைப்பில் இது போன்ற நிபுணர்களின் கருத்து முழுமையாக ஏற்க வைப்பது என்பது சாத்தியமா என்பது கேள்விக்குறி.

  கடந்த டிசம்பர் மாதத்தில் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று பேசிய போது, சமூக நலத் திட்டங்கள் கொள்கை குறித்து முக்கிய கருத்தை தெரிவித்தார். எந்தவொரு நாடும் தனது அளவை மீறி சமூக நலத் திட்ட கொள்கையை கடைபிடித்தால், தீவிரமான பொருளாதார அரசியல் பிரச்னையை சந்திக்க நேரிடும் என்றார். பிரதமர் மோடி கூறிய கருத்துக்கும் ஜி ஜிங்பிங் கூறிய கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

  எனவே, அரசியல் கட்சிகள் தங்கள் தளத்தில் தேர்தல் இலவச வாக்குறுதி குறித்து தீவிரமாக விவதிக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது.

  மாநிலத்தின் பட்ஜெட்டில்  குறிப்பிட்ட சதவீதம் தான் இந்த இலவச திட்டத்திற்கு செலவிட வேண்டும் என்ற கடிவாளம் உருவாக்கப்பட வேண்டும். நாம் ஏற்கனவே, ஜிஎஸ்டி, தனியார்மைய கொள்கை, தொழிலாளர் சட்டம் போன்ற விவகாரங்களில் ஒருங்கிணைந்த கருத்தை கொண்டுவந்துள்ளோம்.

  இன்னொரு சிறந்த உதாரணம் கூற வேண்டும் என்றால், எரிபொருள் மானியத்தை நீக்கியதோடு மட்டுமல்லாது அதன் மூலம் வரிவருவாயை பெருக்கியதும் முக்கிய மாற்றமே. எனவே, ஜனநாயகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டாலும், அதன் விளைவு சிறந்ததாகவே இருக்கும்.

  பொறுப்பு துறப்பு - இந்த கட்டுரை பொருளாதார நிபுணர் மனஸ் சகர்வர்த்தி எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு
  Published by:Kannan V
  First published:

  Tags: Election, PM Modi, Xi jinping

  அடுத்த செய்தி