ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா பாதித்த 80 வயதுமிக்க முதியவர் மற்றும் 20 வயதுமிக்க பெண் சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டனர். அவர்களது ரத்த மாதிரி டிசம்பர் முதல் வாரம் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு இன்று கிடைத்துள்ளது. அதில் இருவருக்கும் ஒமைக்காரன் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • 1 minute read
 • Last Updated :

  புதுச்சேரியில் 80 வயது ஆண் மற்றும் 20வயது பெண் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.

  புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரி ஒமைக்ரான் சோதனைக்கு பெங்களூர் அனுப்பப்பட்டது.இதில் இருவருக்கு உறுதியாகியுள்ளது.இன்னும் பல முடிவுகள் வர உள்ளன. இந்த நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரையை சுகாதார துறை அளித்துள்ளது.இந்தபரிந்துரை குறித்து துணைநிலை ஆளுநரும் முதல்வரும் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

  Also read... புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!

  இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த

  சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு, கொரோனா பாதித்த 80 வயதுமிக்க முதியவர் மற்றும் 20 வயதுமிக்க பெண் சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டனர். அவர்களது ரத்த மாதிரி டிசம்பர் முதல் வாரம் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு இன்று கிடைத்துள்ளது. அதில் இருவருக்கும் ஒமைக்காரன் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

  Also read... ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

  அவர்களுடன் தொடரில் இருந்தவர்களுக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டது.அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றும் இயக்குனர் தெரிவித்தார். புதுச்சேரியில் 600 படுக்கை வசதியுடன் மருத்துவ பிரிவு தயாராக இருக்கிறது.தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்.அப்படி வந்தாலும் முக கவசம்,தனி மனித இடைவெளி அவசியம் என்றும் சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  First published: