ராயலசீமா நீர்ப்பாசனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணைக்கட்டிலிருந்து ராயலசீமா பகுதியின் குடிநீர், விவசாய, தொழிற் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ராயலசீமா நீர்ப்பாசனத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்பட்டதால், இத்திட்டத்திற்கு கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய அனுமதியை பெறவில்லை என்பதால் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தெலங்கானாவைச் சேர்ந்த கவினொல்லா ஸ்ரீநிவாஸ் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் இது நீர்ப்பாசபத் திட்டம்தான் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.
Also read... உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கான கலந்தாய்வு நவம்பர் 3, 4 தேதிகளில் நடைபெறும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..
ஆனால், இத்திட்டத்தால் பெரிய அளவிலான நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் தாக்கம் இருப்பதால் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ந் கீழ் திட்டத்திற்கு அனுமதி அவசியம் எனவும் ஏற்கெனவே ஸ்ரீசைலம் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் பிற திட்டங்களை இத்திட்டம் பாதிக்கும் என்பதால் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் உரிய அனுமதி பெறுவதும் அவசியம் என்றும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்பு தீர்ப்பளித்தது. உரிய அனுமதி இல்லாமல் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: National Green Tribunal